தமிழகம் மாற்றிய கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “நவீன பராசக்தி” !

சற்றுமுன்
 
கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “பராசக்தி” திரைப்பட கதை வசனத்தை இது, இன்றைய பராசக்தி! எனும் தலைப்பில் எவரோ செமையாக நக்கல், நையாண்டி செய்து நவீனமாக மாற்றியமைத்து வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளார் .
 
வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “பராசக்தி” கதை வசனமாவது :
 
இது, இன்றைய பராசக்தி!
 
கருணாநிதி-
 
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமுமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப்பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய ஜீவன்தான்.
 
தமிழக அரசியலில் குழப்பம் விளைவித்தேன். முதல்வரை தாக்கி அவதூறாக எழுதினேன் என்றுகுற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் . நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்… நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லை!நிச்சயமாக இல்லை!! தமிழக அரசியலில் குழப்பம்விளைவித்தேன். அரசியல் கூடாது என்பதற்காக அல்ல. அரசியல் எங்கள் குடும்பத்தை விட்டு அடுத்தவர்களின் கைகளுக்கு செல்லக்கூடாது என்பதற்காக. அதிமுக ஆட்சியை தாக்கினேன்.. ஊழல் கூடாது என்பதற்காக அல்ல. எங்களுக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக.
 
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் குடும்பநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு இனத்தை பெருக்குகிறதே மீன்! அதைப்போல.
 
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் நான் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே.. தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
 
தமிழ்நாட்டிலே திருவாரூரரில் திருக்குவளையில் பிறந்தவன் நான். பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? சென்னை!
 
டிக்கெட் எடுக்க வழியின்றி டிரைன் ஏறி திருவாரூரில் இருந்து வந்த என்னை இந்த மாநிலத்தையே விலைக்கு வாங்குமளவிற்கு வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது.
 
இதோ என் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களே அம்மையார். அவர்களால் தான் நான் ஆட்சியை இழந்தேன், அடுத்தவர்களின் ஆட்சியை சகித்து கொள்ளும் பழக்கம் எனக்கு என்றும் இருந்ததில்லை. அதனால் தான் ஆட்சியை பழி சொன்னேன். தற்பொழுது இங்கு வந்து நிற்கிறேன்.
 
ஆட்சி இல்லாததால் ராஜாத்தி அம்மாள் கனிமொழியை காப்பாத்த என்னை மிரட்டுகிறார். பயந்து போய் கோபாலபுரம் சென்றேன் அங்கே ஸ்டாலின் தலைவர் பதவி கேட்டு என்னை துரத்தினார் அலறி அடித்து அறிவாலயம் வந்தேன். அங்கே அழகிரி அதிகாரம் கேட்டு அதட்டினார்.. ஓடினேன் ஓடினேன் அன்பழகன் வீட்டிற்கு..
 
அங்கும் வந்து நின்றார் தயாநிதி தாத்தா எதாவது தா தா என்று. ஓடினேன் ஓடினேன் ஒருவர் வீடு பாக்கியில்லாது. ஓடினேன் பதவி இருந்திருந்தால் நான் ஓடியிருப்பேனா?
 
என் ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? ஆள விட்டார்களா என்னை ?
 
அரசு வக்கீல்:
 
குற்றவாளி வழக்கிற்கு சம்பந்தமில்லாமல் பேசுகிறார்..
 
கருணாநிதி-
 
இதுவும் வழக்கோடு சம்பந்தம் உள்ளதுதான்..
 
என்னை ஆட்சிக்கு எதிராக பேச வைத்தது யார் குற்றம்? ஊழலின் குற்றமா? அல்லது ஊழலின் பெயரைச் சொல்லி என் ஆட்சியை மாற்றிய தமிழர்களின் குற்றமா? பணம் பறிக்கும் எங்கள் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் எங்களின் குற்றமா? பகுத்தறிவின் பெயரால் மஞ்சள் துண்டை போர்த்தி கொண்டு போலிப் பகுத்தறிவாதி களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? பெரியாரின் குற்றமா? அல்லது பெரியாரின் பெயரைச் சொல்லி கட்சி நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகளும் வீரமணிகளும் குறையப்போவதில்லை.
 
இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்..
 
நீதிபதி-
 
வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது..
 
கருணாநிதி-
 
இதுக்கு தான் இவ்வளவு பில்டப் விட்டேனா… குற்றவாளிகள் நாங்களல்ல எத்தனை மனைவி, துனைவி, இனைவி வச்சுகிட்டாலும்,எத்தனை குற்றம் செஞ்சாலும் இன்னும் என்னை தலைவனாக நினைக்கும் முழு மூடர்கள் தான் குற்றவாளிகள்.
 
என்று கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “பராசக்தி” திரைப்பட கதை வசனம் நவீனமாக மாற்றிய அமைத்து சமூக ஊடக உலகில் வைரலாக பரவிவருகிறது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.