சமூக சேவகி தமிழ்ச்செல்விக்கு குடியரசுத் தலைவர் விருது

Published:

பொதுவாழ்வில் பயணிக்கும் சமூக சேவகி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்- க்கு தன்னலமற்ற சேவைகள் செய்பவர் என்ற சிறந்த சமூக சேவகி எனும் ஜனாதிபதி விருதை குடியரசு தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.  
இந்தியவில் பல்வேறு துறைகள் மற்றும் தாமாக முன்வந்து சமூக சேவையில் மிக சிறப்பாக பணியாற்றி வருபவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களை கெளரவபடுத்தும் விதத்தில் உயரிய விருதுகள் ஒன்றான குடியரசு தலைவர் விருது பலருக்கு வழங்கபட்டு வருகிறது. 
 
இந்த ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தினத்தையொட்டி பொதுவாழ்வில் பெண்கள் எனும் தலைப்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை நாடுமுழுதிலும் இருந்து 100 பெண்களை தேர்ந்தெடுக்கப் பட்டனர். அவர்களுக்கு தன்னலமற்ற சேவைகள் செய்பவர் என்ற சிறந்த சமூக சேவகி எனும் ஜனாதிபதி விருதை இந்த 2016ஆண்டு
புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தினத்தில் 100 பெண்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.  
தன்னலமற்ற சேவைகள் செய்பவர் என்றும் சிறந்த சமூக சேவகி எனும் ஜனாதிபதி விருது பெற்ற சமூக சேவகி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் நமது செய்தியாளருக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளதாவது :-. 
தாய்மொழியை என் பெயரின் முதலெழுத்தாக வைத்து தமிழை எனக்குள் கொண்டுவந்த என் தந்தை பிறந்த ஊர் “வடங்கம்பட்டி”டேனீஷ்பேட்(சேலம்) என்றாலும் எங்கள் தந்தை சென்னைக்கு அருகே பெருங்களத்தூரில் குடியமர்ந்ததனால் என்னுடைய பூர்வீகம் சதானந்தபுரம் கிராமம் பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்)என்றாகிப்போனது. 
பள்ளி படிப்பில் சாதாரண அளவில் மதிப்பெண் பெறும் கொஞ்ச புத்திசாலித்தனம் கொண்ட மாணவி வீடு பெருங்களத்தூர் என்றாலும், படிப்பு தொடர்ந்தது பல்லாவரம் “புனித தெரசா பெண்கள் “மேல்நிலைப்பள்ளியில் நான் படித்த வகுப்பு ஆசிரியர் இல்லை என்றால் நானும் இல்லை என் படிப்பும் இல்லை என்கிறார். இவர் உடன்படிக்கும் தோழிக்கு பென்சில் கொடுத்து உதவுவதில் ஆரம்பித்த குணம் இன்றுவரை தொடரக்காரணம் அனைவருக்கும் உதவும் குணம் கொண்ட தன்னுடைய அப்பா கி.அயோத்திராமன் அவர்கள்தான் என சொல்கிறார். 
அதுமட்டுமின்றி நேசவிழுதுகள் எனும் நண்பர்குழு வை உருவாக்கி அதன்வழியாக பயணிக்கிறார் இவர் ஒவ்வொரு நட்பும் “ஒற்றை இறகாயிருக்க,அதை இணைத்து முழு சிறகாய் “.இந்த முழு சிறகுடன் நாங்கள் ஒவ்வொருவரும் பயணித்து சமூகத்தில் சாதனை படைப்போம் நல்லதை செய்வோம் சாதி மதம் இனம் பாராமல் உதவிகளை செய்வோம்..என்று பெருமையுடன் சொல்கிறார்.இல்லையென்றோர்க்கு உதவணும் நம்மால் முடிந்ததை ” எனும் சொல்லிற்கேற்ப முடிந்த உதவிகள் படிக்க கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறேன்.
 
சமீபத்து சென்னை வெள்ளத்தில் நேச விழுதுகள் மற்றும் shine treechy” என்ற அமைப்புடன் இணைந்து நிவாரணப்பணிகளை மேற்கொண்டதில. நேரிடையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவிய மனத்திருப்தியும் மகிழ்ச்சியும் சொல்லொண்ணா நிறைவான மனநிலையும் அதன் மூலம் கிடைத்தது என சொல்கின்றார்
 
நிச வாழ்வில் நடக்கின்ற செயல்கள் நம்மை ஸதம்பித்து இருக்க செய்கிறது ,சில நிமிடங்கள். இப்படி ஒரு சமூதாய பார்வை பார்க்க காரணம் தன் தந்தை கி.அயோத்திராமன் எனவும் ,அவர்கள் இன்று உயிருடன் இல்லை ,அவர் பெரியாரின் சீடர் நாத்திகவாதி ,சம்பிரதாயங்கள் உள்ள குடும்பத்தில் பிறந்து வாழ்ந்த நாள்முதல் இறக்கின்ற வரை பெரியாரிஸ்ட் டாகவே வாழ்ந்து மறைந்தவர்.அவர் பெண்களை வளர்த்த விதம் முழு சுதந்திரம் கொடுத்தது நிறைய சாதிக்கணும் என்றது,
 
இந்த சமூகத்தில் எப்படி வாழணும் மற்றவர்களுக்கு எப்படி மரியாதை தரவேண்டும் என்று கற்பித்தது இப்படி பெற்றோர்களின் வளர்ப்பே பிள்ளைகளை சீர்தூக்கிகாட்டும் அந்த வகையில் இந்த உயர்திரு ஜனாதிபதி மாளிகயின் வரவேற்பையும் கிடைக்கின்ற விருதையும் தன்னுடைய தந்தை கி.அயோத்திராமன் அவர்களுக்கு நெகிழ்வுடன் சமர்பிப்பதாக ஜனாதிபதி விருது பெற்ற திருமதி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி விருது பெற்ற சமூக சேவகி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் தற்போது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL ) எனும் தொலைப்பேசித் (அரசாங்க) துறையில் சென்னை பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
 
சமூக சேவகி தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் ஜனாதிபதி விருது பெற்றமைக்கு www.dhinasari.com இணைய தமிழ்ச் செய்தித் தளம் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், அவருக்கு தெரிவிக்கிறது. மேலும் அவரது சமூக சேவை தொடர வாழ்த்துகிறது.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Related articles

Recent articles

spot_img