முதலமைச்சர் உறுதி மொழியால் முடிவுக்கு வந்த இடஒதுக்கீடு போராட்டம் !

சற்றுமுன்
 
இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பாக கோரி ‘காபூ’ ஜாதியினர்ஆந்திராவில் நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பல் தீ வைத்ததில், எட்டு பெட்டிகள் எரிந்து, சாம்பலாயின. மேலும் உள்ளூர் காவல் நிலையம் ஒன்றுக்கும், காவல் துறைக்குச் சொந்தமான 8 வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
 
 
இதையடுத்து, கிழக்கு கோதாவரி பகுதியில் சென்று கொண்டிருந்த ரத்னாஞ்சல் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில் ரயிலின் 4 பெட்டிகள் தீக்கிரையாகின. பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த வன்முறைச் சம்பவங்களால் ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி பகுதி உள்பட பல்வேறு இடங்களில் பதற்றம் நிலவி வருகிறது.
 
இந்நிலையில், இடஒதுக்கீடு கோரிக்கைக்கான தங்களது போராட்டத்தை காபு சமுதாயத்தினர் வாபஸ் பெற்றுள்ளனர். முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை என்றும் காபு சமுதாய தலைவர் பத்மனாபம் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட எந்த திட்டமும் போடவில்லை என கூறிய அவர்,முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என நம்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.