தில்லி செல்கிறார் விஜயகாந்த்: பாஜக., கூட்டணி குறித்து பேச்சு

சற்றுமுன்

சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5-ந் தேதி தில்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவை இடம்பெறும் என செய்திகள் வெளியாகி இருந்தன. தேமுதிகவுக்கு 113, பாமகவுக்கு 70, பாஜகவுக்கு 51 என தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதனை பாமக திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரும் 5ஆம் தேதி தில்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தில்லி செல்லும் விஜயகாந்த் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து விவாதிக்க உள்ளாராம்.

பாஜக அணியிலேயே தேமுதிக நீடிப்பதை உறுதி செய்து அறிவிக்கும் வகையில் விஜயகாந்தின் தில்லி பயணம் அமைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.