விருந்தில் ரசம் இல்லை; சமரசம் இன்றி நின்ற திருமணத்தில் கைகொடுத்த திடீர் மாப்பிள்ளை!

Published:

பெங்களூர்:
கர்நாடக மாநிலம் குனிக்கல் பகுதியைச் சேர்ந்த சௌமியாவிற்கும், ஸ்ரீராமபுரம் திம்மையம்மா மகன் ராஜுவுக்கும், நேற்று (ஜனவரி 31ம் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தின் முந்தைய நாளில், இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு தாமதமாக வந்த மணமகன் குடும்பத்தினர், சாப்பிட உட்கார்ந்தனர். அப்போது ரசம் காலியாகிவிட்டதாக மணமகள் வீட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மணமகனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

மறுநாள் காலை நலுங்கு நிகழ்ச்சிக்காக, மணமகன் குடும்பத்தினரை அழைக்கச் சென்ற போது, அவர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்தது தெரிய வந்தது.
சாப்பாட்டு ரசமே, ஒரு திருமண நிகழ்ச்சி ரத்து ஆகக் காரணமான நிகழ்வு, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திருமணமே நின்று போனது, அந்த திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர்கள் நண்பர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. இதைப் பார்த்த, திருமண விழாவிற்கு வந்திருந்த ஒரு இளைஞர் சௌமியாவை தான் திருமணம் செய்து கொள்வதாகக் கூறவே, அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். மணப்பெண்ணும் சம்மதம் தெரிவித்ததின் பேரில், அவர்களின் திருமணம் குறித்த நேரத்தல் நடைபெற்றது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Related articles

Recent articles

spot_img