வதந்தி.! வதந்தி.! திமுகவில் மு.க.அழகிரி மீண்டும் இணையப் போவதாக வெளியான தகவல் வதந்தி.! : மு.க.ஸ்டாலின்

சற்றுமுன்
 
திமுகவில் அழகிரி மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மீண்டும் இணையப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் வெறும் வதந்தி என அந்த கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
 
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று நடைபெற்ற நமக்கு நாமே விடியல் நிகழ்ச்சியில் வியாபார பிரதிநிதிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;-
 
போலி வாக்காளர் பட்டியல் பற்றி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று அவர் தெரிவித்ததார்
 
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மீண்டும் திமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது, இந்த செய்தி உண்மையா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் “திமுகவில் அழகிரி இணையப் போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை” என்று பதிலளித்தார்.
 
மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நடவடிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி, அதிருப்தி அடைந்ததால் அவரை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாகவும், அவருடன் கழக தொண்டர்கள் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என்றும் அறிவித்துள்ளார் என்று மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.