லயோலா என்ற ‘கொலைகார ஜேசுட்ஸ்’! பழைய புற்றிலிருந்து வெளிவரும் நச்சுப் பாம்பு!

லயோலா கல்லூரியின் பின்னணி : லயோலா கல்லூரியில் இப்பொழுது எழுத்துள்ள சர்ச்சை குறித்து அபிப்பிராயம் தெரிவிப்பவர் ஒரு காலத்தில் அது தரம் வாய்ந்த கல்லூரி இப்பொழுது தரம் தாழ்ந்து விட்டது என்று பேச்சை முடித்து விடுவார்கள். ஏன் என்றால் அந்த கல்லூரியிலன் பின்னணி அவர்களுக்கு தெரியாது.

16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க பிரிவு இல்லாத வேறு கிருஸ்துவ பிரிவுகள் வளர ஆரம்பித்தன. கடல் வழியே வேறு மதங்கள் நிறைந்த ஆசியாவும் அமேரிக்காவும் ஐரோப்பிய ஆளுமைக்குள் வர தொடங்கின.

கிருஸ்துவ மதத்தின் வேறு பிரிவுகளின் வளர்ச்சியை தடுக்கவும் ஆசியா அமேரிக்க கண்டத்தில் உள்ள வேற்று மதத்தினரை கிருஸ்துவர்களாக‌ மாற்றவும் 1540 ஆம் ஆண்டு போப் ஆசியுடன் Society of Jesus ஆரம்பிக்கப்பட்டது.

Society of Jesus யின் ஸ்தாபனர்கள் இக்னீசியஸ் லயோலா மற்றும் பிரான்ஸ் சேவியர். இதன் உறுப்பினர்கள் ஜேசுட்ஸ் (Jesuits) என்று அழைக்கப்பட்டனர்.

வன்முறை உட்பட எந்த முறையையும் கையாண்டு மதமாற்றத்தை செய்வது அவர்களின் குறிக்கோள்.

முதலில் ஜேசுட்ஸ் கிருஸ்துவ நாடுகளில் செய்த அட்டகாசங்கள் பார்போம்.

இவர்கள் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு ராஜாக்களை கொல்ல முயற்சி செய்ததால் அங்கு தடை செய்யப்பட்டனர். போர்ச்சுக்கல் பூகம்பத்திற்கு பிறகு பாவிகளினால் தான் அங்கு பூகம்பம் ஏற்பட்டது என்று பலரை தூக்கிலிட்டனர். அந்த நாட்டின் ராஜா இவர்களின் மேல் கோபம் கொண்டு அந்த நாட்டின் ஜேசுட்ஸ் தலைவனை தூக்கிலிட்டு இவர்கள் கொட்டத்தை அடக்கினான்.
அமேரிக்க உள்நாட்டுப் போரில் இவர்கள் கறுப்பர்கள் அடிமையாக இருப்பதை ஆதரிக்கும் பிரிவுடன் சேர்ந்து அதிபர் லிங்கனின் கோபத்திற்கு ஆளானார்கள்.

இப்படிப்பட்ட ஜேசுட்ஸ் இந்தியாவில் செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

போர்ச்சுக்கல் நாட்டின் கூலிப்படை கோவாவில் வந்திறங்கிய 50 ஆண்டுகளில் ஜேசுட்ஸ் தலைவன் பிரான்ஸ் சேவியர் கோவா வந்தான்.

கோவாவில் இந்து மதம் தடை செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன. இந்து புனித புத்தகங்கள் கொளுத்தப்பட்டன. இந்து மத சடங்குகள் தடை செய்யப்பட்டன. தடையை மீறுபவர்களை தண்டிக்க Goan Inquisition என சிறப்பு நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டு 250 ஆண்டுகளாக இயங்கியது.

இந்த நீதிமன்றத்தால் பலர் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளானார்கள். இந்துக்கள் மட்டுமின்றி கத்தோலிக்க மதத்தை சாராத அனைத்து மதத்தினரும் தண்டிக்கப்பட்டனர். கேரளாவின் சிரியன் கிருஸ்துவ பிரிவின் தலைவர் உயிருடன் எரிக்கப்பட்டார்!

கோவாவை அடுத்து ஜேசுட்ஸ்யினால் அதிகம் பாதிக்கப்பட்ட இடம் தமிழர் வாழும் பகுதிகள் தான்.

இலங்கையில் ஈழ பகுதியில் நூற்றுக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டன. யாழ்ப்பாண ராஜகுடும்பம் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப் பட்டார்கள்.

தமிழக கடற்கரை ஓரத்தில் வாழும் பரவர்கள் மதம் மாற்றப் பட்டார்கள்.

மயிலை கபாலி கோவில் இடிக்கப்பட்டு அங்கு சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டது.

திருச்செந்தூர் கோவில் கொள்ளையடிக்கப்பட்டு முருகனின் விக்ரகம் கடலில் வீசப்பட்டது.

திருச்சானூர் கோவில் இடிக்கப்பட்டு திருப்பதி கோவில் கொள்ளை அடிக்கப்பட்டது.

போர்ச்சுக்கல், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து படைகளிடம் தோல்வி அடைந்ததால் இந்த ஜேசுட்ஸ்யின் கொட்டம் அடங்கியது.

கள்ளச்சாராயம் விற்பவன் நாளடைவில் தொழிலதிபர் மற்றும் கல்வியாளராக மாறுவதை போல ஜேசுட்ஸ் கல்வி நிலையங்கள் நடத்த ஆரம்பித்தனர்.

இன்று இந்தியாவில்தான் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக கல்வி நிலையங்களை ஜேசுட்ஸ் நடத்துகின்றனர். உலகில் உள்ள 20% ஜேசுட்ஸ் சுமார் 4000 பேர் இந்தியாவில் உள்ளனர். 
தமிழ் நாட்டில் இவர்கள் நடத்தும் முக்கிய கல்வி நிலையங்கள் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, திருச்சி ஜோசப் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரி.

கல்வியறிவு இல்லாதவனுக்கு கல்வி போதிக்க இவர்கள் ஜேசுட் ஆவதில்லை. மதமாற்றம் தான் இவர்களின் குறிக்கோள்.

மறைமுகமாக பல யுக்திகளை கையாண்டு தமிழ் நாட்டில் மதமாற்றத்தில் சில வெற்றிகளை கண்டுள்ளனர்.

இன்று இந்துத்துவ இயக்கங்களின் வளர்ச்சி மற்றும் மத்திய அரசின் கொள்கை, ஜேசுட்ஸ்களுக்கு தடையாக உள்ளதால் அமைதி வேஷத்தை துறந்து பழைய விஷப் பாம்பு புற்றிலிருந்து புஸ் என்று கிளம்பி வர ஆரம்பித்துள்ளது.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...