நாட்டின் உயர்தர மருத்துவமனை எங்கள் ஊரில்: மதுரை மக்கள் பெருமித மகிழ்ச்சி!

சற்றுமுன் தமிழகம் மதுரை
modi lays foundation aiims - 2026

மதுரை: ஜன.27 ஞாயிற்றுக்கிழமை இன்று முற்பகல் 11:30க்கு மதுரை, மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அரசு மருத்துவ கல்லுாரிகள் மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு பகுதியாக, மதுரை, தஞ்சாவூர் மற்றும் நெல்லை மருத்துவக் கல்லுாரிகளில், 450 கோடி ரூபாயில், கட்டப்பட்ட பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவுகளையும், பிரதமர் திறந்து வைத்தார்.

தங்கள் ஊரில் நாட்டின் உயர்தர சிகிச்சை பெறும் வகையிலான எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மதுரை மக்கள் கூறியுள்ளனர்.

மதுரை மக்களின் நீண்ட கால ஆசையும் கோரிக்கையும் நிறைவேறத் தொடங்கியிருக்கிறது என்று கூறியுள்ளனர் மதுரை மக்கள்.

அதேபோல், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர துணையாக இருந்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஆகியோர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.