தமிழகத்தை நாசத்துக்கு மேல் நாசம் செய்கிறார் வைகோ: மக்கள் குற்றச்சாட்டு!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் மதுரை
vaiko madurai - 2026

மதுரை: தமிழகத்தை நாசத்துக்கு மேல் நாசம் செய்கிறார் வைகோ என்று மதுரை மக்கள் குற்றம்சாட்டினர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவுக்காக வந்திருந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வந்தார் வைகோ.

அப்போது பேசிய அவர், தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகத்தை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம், முல்லை பெரியாறுக்கு பதிலாக கேரளா வேறு அணை கட்ட அனுமதி, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி என மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.

உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்து தமிழகத்துக்கு நாசத்துக்கு மேல் நாசம் செய்கிறது பாஜக என்று வைகோ தெரிவித்தார்.

இந்நிலையில் வைகோவுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழகத்தை நாசத்துக்கு மேல் நாசம் செய்கிறார் வைகோ என்று மதுரையில் கூடிய மக்கள் கருத்து தெரிவித்தனர். வைகோ தாம் சேர்ந்த கூட்டணியையும் கூட்டணிக் கட்சிகளையும் தான் நாசம் செய்வார். இப்போது தாம் வாழும் தமிழகத்தையே நாசத்துக்கு மேல் நாசம் செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.