அரசு ஊழியர்களின் அளப்பரிய ‘சேவை’யால்… மக்கள் கொண்ட கொள்ளை ‘அன்பு’!

Published:

teachers strike - 2026

இந்த ஆசிரியருங்க போராட்டம் புலி வருது புலி வருதுன்னு பீதிய கிளப்பிவிட்டவன் கதையா போச்சு..

உண்மையிலலே புலிவந்துட்டப்போ, அவன் புலி வருதுன்னு சொன்னதை எவனும் நம்பல.. உதவிக்கும் வரலை..கடைசியில புலி அவனை போட்டுச்சு..

அந்த மாதிரி எப்பவுமே. சம்பளவு உயர்வு சம்பள உயர்வுன்னு கேட்டு போராட்டம் நடத்தி வந்ததால ஆசிரியர் போராட்டம்னாலே சம்பள உயர்வு போராட்டம்தான்னு ஜனங்க தீர்மானிச்சிட்டாங்க.

பாவம், இப்போ உண்மையிலேயே ஆசிரியருங்க சம்பள உயர்வு கேக்கலை. ஓய்வூதிய பிரச்சினைக் காகத்தான் போராடுறாங்க.

ஆனா ஜனங்க மத்தியில ஆதரவே இல்லை. சம்ப ளத்தை ஏத்திகேக்கற அவுங்கள, முதல்ல வூட்டுக்கு அனுப்புங்கன்றாங்க. கவர்மெண்ட்டுக்கு வசதியா போச்சி, ரவுண்ட் கட்டி விளையாடுது..

அரையாண்டு லீவு, பொங்கல் லீவு எல்லாம் அனுப விச்சி முடிஞ்சி, பள்ளிக்கூடம் தொறந்த ஒடனேயே ஸ்டிரைக்குன்னு ஆரம்பிச்சது, கடுப்பை இன்னும் அதிகமாக்கிடிச்சி..

சங்கங்களை வழிநடத்துறவங்க பண்ற கோளாறு இப்போ டீச்சருங்களுக்கு இடியாப்ப சிக்கலாயிடிச்சு

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

நாளைக்கே பேங்க் ஊழியர்கள் ஏதாவது போராட்டம் ஆரம்பிச்சா அவுங்களுக்கும் ஜனங்க இதேமாதிரிதான் ரியாக்ட் பண்ணுவாங்க..

”இவனுங்களுக்கு இதே எழவுதான் எவ்ளோ கொட்டி குடுத்தாலும் பத்தாது..ஆனா வேலைமட்டும் செய்யவே மாட்டானுங்க.. தெரியலைன்னு எதையாவது கேட்டா நாய் மாதிரி எரிஞ்சி விழுவானுங்க”ன்னு அசால்ட்டா காறித்துப்புவாங்க.

அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர் களின் ”அளப்பறிய சேவை”யால் மக்கள் கொண்டி ருக்கும் ”கொள்ளை அன்பு”வோட வெளிப்பாடு இது!

கருத்து : ஏழுமலை வேங்கடேசன் (ஊடகவியலாளர்)

Related articles

Recent articles

spot_img