மிரட்டலான கேட்ச்சின் மூலம் செம கம்பேக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா!
பெண்கள் குறித்து இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார் ஹர்திக் பாண்டியா!
இவர், வில்லியம்சனின் கேட்ச்சை அபாரமாக பிடித்து செம கம்பேக் கொடுத்தார்.
சாஹலின் பந்தை வில்லியம்சன் டிரைவ் ஆட, மிட் விக்கெட் திசையில் நின்ற ஹர்திக் பாண்டியா அபாரமாக டைவ் அடித்து அதை கேட்ச் செய்தார்.
ஹர்திக்கின் மிரட்டலான கேட்ச்சால் 28 ரன்களில் நடையை கட்டினார் வில்லியம்ஸ். மிகச்சிறந்த ஃபீல்டரான ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் தனது இருப்பின் முக்கியத்துவத்தை ஒற்றை கேட்ச்சில் நிரூபித்தார். துவண்டு போயிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு இது சிறந்த கம்பேக் தான்!