புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் சந்நிதியில் அனுமன் திருமேனிக்கு மாலை அணிவித்து கீழே இறங்க முயன்ற நாமக்கல் ஜெயராமன் அர்ச்சகர் தம்பி திடீரென வழுக்கி கீழே விழுந்தார்.
சுமார் 8 அடி உயரத்தில் இருந்து விழுந்த அவருக்கு தலையில் பலத்த அடி பட்டது. தொடர்ந்து சேலம் நியூரோ பவுண்டேஷன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இந்தச் சம்பவம் நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.