சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.. இன்னும் ஒரு மாதம் கூட வராதே..!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
ramadoss - 2026

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு ஒரு டி.எம்.சியாக குறைந்தது. இந்த நீர் அடுத்த ஒரு மாதத்திற்கு கூட போதாது.

ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நீரைப் பெறுவதன் மூலமும், உள்ளூர் ஆதாரங்களைப் பயன்படுத்தியும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க வேண்டும்!

டிவிட்டரில் டாக்டர் ராமதாஸ்..

டாக்டர் ராமதாசின் கவலை நியாயமானது..
இதைத்தான் நாம கடந்த ஒரு மாசமாவே புள்ளி விவரத்தோட சொல்லி கிட்டு வர்றோம்.. 11.2 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நாலு ஏரியிலும் இப்பவே ஒன்றரை டிஎம்சி தான் இருக்குன்னு சொன்னோம். இப்போ அது ஒரு டிஎம்சியா வந்து நிக்குது..

ஜெயலலிதா கொண்டு வந்த வீராணம் திட்டம் பெரிய அளவுல கைகுடுத்துக்கிட்டு இருக்கு. இன்னைய தேதிக்கு மெட்ரோ வாட்டர் கோஷ்டி ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு, பத்தும் பத்தாக் குறையுமா சென்னக்கு தினமும் 65 கோடி லிட்டர் சப்ளை பண்ணுது..

இதுல வீராணம் மூலம் மட்டும் 18 கோடி லிட்டர் கிடைக்குது. கடல்நீரை குடிநீராக்கிற திட்டங்க மூலமா 17 கோடி லிட்டர். இரண்டும் சேர்த்து 35 கோடி. 65-35= 30 கோடி லிட்டர் பாக்கி. இந்த பாக்கி தண்ணீ ரைத்தான் பூண்டி, ரெட்ஹில்ஸ்ல இருந்து எடுக்க றாங்க..சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிங்க சுத்தமா வத்திப்போச்சு..

ஆனா இன்னைக்கு நியூஸ் சேனல்ல பாருங்க.. யாரும் இது பத்தி விவாதிக்கமாட்டாங்க.. இதெல்லாம் நாம பெற்ற வரம்..

  • ஏழுமலை வேங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.