ஜெயலலிதா மீதான பரிசு பொருள் வழக்கின் மீது இன்று இறுதி விசாரணை

Published:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசு பொருள் வழக்கின் இறுதி விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

1992-1993 ஆண்டுகளில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 3 லட்சம் டாலர்கள் மதிப்பிலான பரிசு பொருட்களுக்கான வரியைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக, 2006 ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.

இதனை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்க்கு எதிராக சி.பி.ஐ. கடந்த 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனு மீதான இறுதி விசாரணையானது இன்று தொடங்குகிறது. நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமித்தவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெறுகிறது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img