பெண்ணின் வெற்றி சுலபமானது அல்ல; தலை வணங்குகிறேன்: ஆனந்த் மஹிந்த்ரா

உரத்த சிந்தனை சற்றுமுன் சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
FB IMG 1549609335298 - 2026

மஹிந்த்ரா நிறுவனத்தின் நிறுவனத் தலைவரான ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டரில் பதிவிட்ட ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

அதில் அவர் “கடந்த வாரம் முழுவதும் எனது பேரப் பிள்ளையை கவனித்துக் கொள்வதில் உதவியாக இருந்தேன். அப்போதுதான் ஒரு ஆழமான உண்மையை உணர்ந்தேன்.

அது எனக்கு இந்த சித்திரத்தை கண்முன் கொண்டுவந்தது. வேலைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணையும் வணங்குகிறேன். அவர்களது வெற்றிக்கு ஆண் சகாவைவிட மிக அதிகமான முயற்சி தேவைப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மஹிந்த்ரா பகிர்ந்திருந்த அந்தப் படத்தில், ஓர் ஓட்டப்பந்தய மைதானத்தில் வேலைக்குச் செல்லும் ஃபார்மல் உடையில் ஆண்களும் பெண்களும் ஓடுவதற்கு தயார் நிலையில் இருக்க ஆண்களுக்கான பாதை தடையின்றியும் பெண்களுக்கான பாதையில் உலர்த்தப்பட்ட துணிகள், டிஷ்வாஷ், வாஷிங் மெஷின், அயர்னிங் டேபிள் போன்ற உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

1 thought on “பெண்ணின் வெற்றி சுலபமானது அல்ல; தலை வணங்குகிறேன்: ஆனந்த் மஹிந்த்ரா”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.