இறுதியில் வெல்லப் போவது யார்? இஸ்லாமிய ஆண்களா? இஸ்லாமிய பெண்களா?

Published:

07 Aug09 Triple talak - 2026

ராகுலைத் தொடர்ந்து காங்கிரஸ் பெண் எம்பி.. ஒருவரும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் முத்தலாக் சட்டத்தை ஒழிப்போம் என்று கூறியுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில்

வெற்றிபெற்று நாங்கள் ஆட்சியில் அமர்ந்ததும், இஸ்லாமிய ஆண்களுக்கு எதிராக உள்ள முத்தலாக் சட்டத்தை தூக்கி எறிவோம் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பெண் எம்பி., சுஷ்மிதா தேவ்.

இவர், மகளிர் காங்கிரஸ் தலைவராகவும், அசாம் மாநிலம் சிலிகர் தொகுதி எம்.பி.,யாகவும் உள்ளவர். தில்லியில் சிறுபான்மை சமூகத்தவருடனான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுஷ்மிதா தேவ், நீங்கள் வாக்கு அளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், முதல்வேலையாக முத்தலாக் சட்டம் நீக்கப்படும் என்று கூறினார். அதனால்தான் நாடாளுமன்றத்தில் முத்தலாக் சட்டத்தை குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சட்டத்தை எதிர்ப்பது தொடர்பாக கட்சி அலுவலகத்திற்கு கோடிக்கணக்கான கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்களும் கூட கையெழுத்திட்டு அனுப்பி உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டம் கொண்டு வரப்படாது என உறுதி அளிக்கிறோம் என்று பேசினார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!
sushmita dev - 2026

மேலும், இந்த சட்டமானது மோடி அரசால் இஸ்லாமிய ஆண்களை சித்திரவதை செய்வதும் சிறைக்குள் தருவதுமான ஓர் ஐடியா தான் என்று கூறியுள்ளார்! என்னிடம் பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள் இது இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பையும் அவர்களது பொருளாதார வளம் வாழ்க்கைக்கான எதிர்கால தேவையை நிறைவு செய்வதாகவும் என்று! ஆனால் நாங்கள் இதனை எதிர்க்கிறோம்! ஏனென்றால் பாஜக இஸ்லாமிய ஆண்களுக்கு எதிராகவும் போலீசார் மூலம் அவர்களை துன்புறுத்துவதற்கு மான ஏற்பாடாகவே இந்த சட்டத்தை வைத்து இருக்கிறது என்றார் அவர்.

இஸ்லாமியர்கள் உடனான தனது சந்திப்பின்போது ராகுல் காந்தி ஒரு உறுதிமொழியை அவர்களுக்கு அளித்திருக்கிறார். அதன்படி தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள முத்தலாக் தலையை முழுவதுமாக நீக்குவோம் என்று கூறியிருக்கிறார்

ராகுல் காந்தியின் இதே கருத்தை காங்கிரசின் மகளிர் பிரிவு தலைவர் சுஷ்மிதா தேவ் தில்லியில் நடைபெற்ற சிறுபான்மையினர் கூட்டத்தில் கூறியிருக்கிறார்! பாஜக அரசு கொண்டுவர உள்ள முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய பெண்களை காப்பாற்றுவதற்கு பதிலாக ஆண்களை தண்டிக்கும் வகையில் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

ஆனால், முத்தலாக் தடைச்சட்டத்துக்கு இஸ்லாமிய பெண்கள் ஒட்டுமொத்தமாக ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். இதற்காக நன்றி சொல்லி பேரணிகளையும் நடத்தியுள்ளனர். அதே நேரம், ஆண்கள் இந்தச் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆண்களின் குரலை செவிமடுத்து அவர்களுக்காக முத்தலாக் சட்டத்தை நீக்குவோம் என்று உறுதி கொடுத்திருக்கிறது. அதே நேரம், தங்கள் வாழ்க்கைக்கு சட்ட பாதுகாப்பை அளித்துள்ள ‘மோடி’க்கு ஆதரவு கொடுப்போம் என்று இஸ்லாமியப் பெண்கள் கூறுகின்றனர். எனவே இந்தத் தேர்தல் முத்தலாக்கை மையமாகக் கொண்டு, இஸ்லாமிய ஆண்களுக்கும் பெண்களுக்குமான கருத்து மோதலை ஏற்படுத்தியிருக்கிறது. வெற்றி பெறுபவர்களைப் பொறுத்து, இஸ்லாமிய ஆண்களின் கை ஓங்கியிருக்கிறதா? அல்லது பெண்களின் கருத்து ஓங்கியிருக்கிறதா என்பது தெரியும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img