பிப்.15.. மதுரையை முடக்குவோம்! பெயர் சூட்டு விவகாரத்தில்… எழும் குரல்!

சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
Muthuramalinga Thevar Jayanthi and Gurupooja started - 2026

வரும் பிப்ரவரி 15ஆம் தேதி மதுரையை முடக்குவோம் என்று முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன் மற்றும் சிலர் அறிவித்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் தெரிவித்தும், NOC அனுப்ப மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்தும்,

தமிழக அரசின் ஏழாம் வகுப்புப் பாடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கனார் என்று இருப்பதை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என மாற்றம் செய்யக் கோரியும்,

கள்ளர், மறவர் உள்ளிட்ட சாதிகளை சீர்மரபினர் DNC என்பதற்குப் பதிலாக சீர்மரபு பழங்குடியினர் DNT என்று அறிவிக்கக்கோரியும்,

என மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, பிப்ரவரி 15 மதுரையை முடக்குவோம் என முழு அடைப்பு போராட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ கதிரவன் தலைமையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று, அமமுக துணைப்பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.