ஒப்பந்ததாரரிடம், நகராட்சி ஆணையர் லஞ்சம் பெற்ற வீடியோ காட்சியால் பரபரப்பு

சற்றுமுன்

சிவகங்கையில் தனியார் ஒப்பந்ததாரரிடம், நகராட்சி ஆணையர் லஞ்சம் வாங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட தினசரி சந்தையில், நிழற்மேற்கூரை அமைக்க நகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் விடப்பட்டது.

 

பணிகள் முடிவடைந்து, அதற்கான காசோலையை வழங்குவதற்கு நகராட்சி ஆணையர் சக்திவேல், தனியார் நிறுவனத்திடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒப்பந்ததாரரின் அலுவலகத்திற்கு சென்ற நகராட்சி ஆணையர், 4 லட்சத்து பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலையை அளித்து விட்டு, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டார்.

 

இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. தற்போது அந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.