மோடியே மீண்டும் பிரதமர்! பாஜக.,வையும் அதிமுக.,வையும் பிரிக்க முடியாது: மதுரை ஆதீனம்

Published:

madurai aadheenam press meet stills 12 - 2026நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தான் வெற்றி பெறும், மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்பார்,  பாஜக.,வையும் அதிமுக.,வையும் பிரிக்க முடியாது! தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார் மதுரை ஆதீனம்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுரை ஆதீனம்! அப்போது அவர்,

இந்த இந்தியத் திருநாட்டுக்கும் இந்த உலகத்திற்கும் பெருமை சேர்க்கக்கூடிய புனிதம் சேர்க்கக் கூடிய இந்த நாட்டை பாதுகாக்கக்கூடிய பெருமை மகிமை உடையவர் நம்முடைய அன்பிற்கும் நிரந்தர பாராட்டுதலுக்கும் உரிய நரேந்திர மோடி அவர்கள் தான்!

அது போலவே தமிழ்நாட்டின் நலனைக் காக்க அன்றாடம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நம் அன்புக்குரிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இந்த நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறார்கள்

எனவே பாஜகவையும் அதிமுகவையும் ஒருபோதும் பிரிக்க முடியாது! பாஜக அரசைப் பொறுத்த வரையில் வேறு எந்த மதத்திற்கும் அது விரோதமான கட்சி அல்ல ஆட்சியும் அல்ல

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அதிமுக அணிதான் வெற்றிபெறும்! மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வருவார்கள்! இங்கேயும் இந்த ஆட்சி நல்ல முறையில் தொடரும்! அதில் எந்த மாற்றமும் இல்லை! இறைவனுடைய தீர்ப்பு அது என்று கூறினார் மதுரை ஆதீனம்.

Related articles

Recent articles

spot_img