கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட விருப்ப மனு!

சற்றுமுன் தமிழகம் நெல்லை

Stalin Rahul Gandhi Chennai - 2026

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு தாக்கல் செய்ய பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் மனுவாக ராகுல் காந்தி பெயரில் விருப்பமனு பெறப்பட்டது.

ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களில் ஏதேனும் ஒரு தொகுதியிலும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் ராகுல் பெயரில் விருப்பமனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

1 thought on “கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட விருப்ப மனு!”

  1. தமிழக மக்களுக்கு ஆறாத்துயரத்தை அளித்துள்ள பேராயக்கட்சியின்(காங்கிரசின்) தலைவர் இராகுல் ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைத் தாக்குதலுக்கு மன்னிப்பும் கேட்கவில்லை; வருத்தமும் தெரிவிக்கவில்லை. இனப்படுகொலையாளிகளைத் தண்டிக்குமாறு குரல் கொடுத்தால் அவர் அன்னையும் மாட்டிக் கொள்வார்; அவர் கட்சியும் தண்டனைக்கம்பியில் சிக்கிக் கொள்ளும். ஆனால் தானும் தன் அன்னையும் தன் கட்சியும் செய்த கொடுங்குற்றங்களுக்குக் கழுவாயாக அவர் ஒன்று செய்ய இயலும். தமிழ் ஈழத்தைப் பேராயக்கட்சி ஏற்கிறது; உலக நாடுகள் அவை ஏற்பதற்குப் பாடுபடுவோம் என அறிவிப்பதுதான். இதனால் செய்த குற்றங்கள்பற்றிய பேச்சு மங்கி விடும். இவ்வாறு தமிழ் ஈழத்தை ஏற்காத சூழலில் தமிழ்நாட்டில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால், தமிழ் மக்களுக்கு இதைவிடப் பேரிழுக்கு வேறில்லை.

    அவரது கட்சியைச் சேர்ந்த அழகிரி முதலான அடிமைகள் தமிழ்நாட்டில் இராகுல் போட்டியிட வேண்டும் எனக் கூக்குரல் இடுகின்றனர். இதனைத் தமிழ்நாட்டின் குரலாக எண்ணி அவர் தமிழ்நாட்டில் போட்டியிடும் முடிவிற்கு வரக்கூடாது. அவ்வாறு அவர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால், துண்டைக் காணோம் துணியைக் காணோம் எனப் பதறி ஓடும் அளவிற்கு அவருக்குத் தமிழக வாக்காளர்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.