18 தொகுதி இடைத்தேர்தல்… திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் ஸ்டாலின்!

Published:

stalin press meet - 2026

நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

திமுக., போட்டியிடும் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்ட திமுக., தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிடும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

18 தொகுதிகளுக்கான தமிழக இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் பட்டியல்:

பூந்தமல்லி: கிருஷ்ணசாமி
பெரம்பூர்: சேகர்
சோழிங்கர்: அசோகன்
குடியாத்தம்: காத்தவராயன்
ஆம்பூர்: விஸ்வநாதன்
ஓசூர்: சத்யா
பாப்பிரெட்டிபட்டி: மணி.
அரூர்: கிருஷ்ணகுமார்
நிலக்கோட்டை: சவுந்திரபாண்டியன்
திருவாரூர்: பூண்டி கலைவாணன்
தஞ்சாவூர்: நீலமேகம்
மானாமதுரை: கரூர் காசிலிங்கம் என்ற இலக்கியதாசன்
ஆண்டிபட்டி: மகாராஜன்
பெரியகுளம்: சரவணகுமார்
பரமக்குடி: சம்பத்குமார்
சாத்தூர் : சீனிவாசன்
விளாத்திகுளம்: ஜெயக்குமார்
திருப்போரூர்: செந்தில் என்ற இதயவர்மன்

ஸ்டாலின் தனது மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை வரும் 20ஆம் தேதி திருவாரூரிலிருந்து தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img