லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களையும், 18 சட்டமன்ற இடைதேர்தல்களில் போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்களையும் வெற்றி அடைய செய்வதற்காக இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன் இன்று மதிமுக பொதுச் செயலாளர், வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், தூத்துக்குடியில் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் தொடங்கி, ஏப்ரல் 16ந்தேதி வரை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். இந்தியாவில் மோடி எதிர்ப்பலை வீசுவது போல, அதிமுக ஆட்சிக்கும் தமிழகத்தில் எதிர்ப்பு இருக்கிறது.
மதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதுதான் எந்த சின்னம் என்பதை குறிப்பிட முடியும். தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கும் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.