நிரந்தர சைக்கிள் சின்னம்! ஜி.கே.வாசன் கோரிக்கை நாளை விசாரிப்பு!

Published:

gkvasan cycle - 2026

சென்னை : தமாகா.,வுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் தரப்பு கருத்தை கேட்காமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும் என்ற நிபந்தனையுடன் தேர்தல் ஆணையம் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது என்று ஜி.கே.வாசன் தரப்பில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இதை அடுத்து, இந்தக் கோரிக்கையை ஒரு தனி மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கப்படும் என நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது. இதை அடுத்து, சைக்கிள் சின்னம் குறித்து நாளை விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

Related articles

Recent articles

spot_img