சிவசைலம் அருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைல நாதர் திருக்கோயிலில் பங்குனி மகா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சிக்கு எழுந்தருளுகின்றனர். 11ஆம் திருநாளான ஏப். 13 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தீர்த்தவாரி மற்றும் ரிஷப வாகனத்தில் அத்ரி மகரிஷிக்கு காட்சியளித்தலும் நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் கட்டியம் கூறுதல், வேதபாராயணம், தேவாரப் பண்ணிசை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.