அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா தொடங்குகிறது.
இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம், நாளை தொடங்குகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயிலின் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே, கன்யா லக்னத்தில், பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது.
இந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம், புதன்கிழமை (ஏப்.10) தொடங்குகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயிலின் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே, கன்யா லக்னத்தில், பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது.
புதன்கிழமை (ஏப்.10) முதல் 19-ம் தேதி வரை தினமும் காலை வேளைகளில் உற்சவர் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு வேளைகளில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உற்சவர் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவின்போது பொம்மைக் குழந்தை உற்சவருக்கு பூக்கள் தூவும் அபூர்வ நிகழ்வும் நடைபெறுகிறது.