நாம் யார் பக்கம்? அபிநந்தன் பக்கமா? அமெரிக்க இதழ் பக்கமா?

Published:

f16aircraft - 2026

சில நாள்களுக்கு முன் அமெரிக்க இதழ் ஒன்று பாகிஸ்தானின் F-16 விமானங்கள் எண்ணிக்கை குறையவில்லை என்று வெளியிட்ட “செய்தி”யையடுத்து, வழக்கம் போல பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்னை கர்னல் என்றும். மேஜர் என்றும், ஏர்மார்ஷல் என்றும் என்னை டிரால் செய்து இதற்கு என் பதில் என்ன என்று கேட்டிருந்தார்கள்.

அந்த இதழின்செய்தி ஏற்கக்த் தக்கதல்ல என்று ஏற்கனவே பெண்டகன் அறிவித்து விட்டது. நமது விமானப் படையும் பாக் விமானப்படை தாக்கப்பட்டதற்கு எலக்ட்ரானிக் சிக்னச்சர், ரேடியோ செய்திகள், கண்கூடப் பார்த்த சாடசியங்கள், உடைந்த விமானத் துண்டுகள் இவை ஆதாரமாக இருக்கின்றன எனக் கூறியதோடு அவற்றை வெளியிடவும் செய்திருக்கிறது

அவை இந்தப் பதிவின் இணைப்பில் உள்ள செய்தியுடன்

பாக் தனது F-16 விமானங்களை இந்தியாவிற்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒப்பந்தம் இருக்கிறது. பயன்படுத்தினால் அது நிதி உதவி உள்ளிட்ட நெருக்கடிகளை சந்திக்க நேரும்

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

அதற்காக அது f-16 பயன்படுத்தப்படவில்லை என்பது போன்ற புளுகுகளை அத்ன் சில அமெரிக்க ஆதரவாளர்கள் மூலம் பரப்பும்.

F-16ஐ தாக்கியவர் அபிநந்தன்.

நாம் யார் பக்கம். அபிநந்தன் பக்கமா? அமெரிக்க இதழ் பக்கமா?

  • மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன் 

Related articles

Recent articles

spot_img