தர்பார் – மோடியின் சௌகிதார் பாணியில்..! போலீஸ் வேடத்தில் ‘காவல்காரன்’ ரஜினி!

Published:

darbar - 2026

நாடெங்கும் அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கையும் கருத்தும் சொல்லாமல், புதுப் பட வேலையில் இறங்கி விட்டார்.  இரு தினங்களுக்கு முன்னர், ரஜினி நடிக்கும் படத்தில் அவர் போலீஸ் வேடம் போட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக  போட்டோஷூட் நடந்த படங்கள் வெளியில் கசிந்தன.

இந்நிலையில், ரஜினியின் புதிய படத்துக்கு தர்பார் என்று பெயர் சூட்டப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தர்பார் படத்தின் மூலம், 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதையில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்! பேட்ட படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தலைவர் 167 ஆவது படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்!

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதன் முதலாக ரஜினியை வைத்து தலைவர் 167 என்ற படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 167 படத்தின் டைட்டில் தர்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

27 வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் இப்படத்தின் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் தெரிய வந்துள்ளது.

நல்லவனா இருக்கனுமா, கெட்டவனா இருக்கனுமா? இல்லை ரொம்ப கெட்டவனா இருக்கனுமா நீங்களே முடிவு பண்ணிக்கோங்க… என்று தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

காவல்காரன் எனும் விழிப்பு உணர்வுச் சொல்லால் மோடி ஒரு புறம் அந்த வார்த்தையை பிரபலப் படுத்திக் கொண்டிருக்க.. ரஜினியும் மோடியின் வழியில் இப்போதைய டிரெண்ட் பிரகாரம் சௌக்கிதார் – காவல்காரன் – போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img