சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா இன்று தொடங்குகிறது.
பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா நடத்தப்படுகிறது. அந்தவகையில், இந்தாண்டு 09.4.2019 முதல் 21.9.2019 வரை விழா நடைபெறுகிறது.
இன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள்ளாக கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாகத் திருத்தேரோட்டமும், ஏப்ரல் 19-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
பிரதி தினம் மாலையில் திருக்கோயிலில் 6.00 மணி முதல் 7.30 மணி வரையிலும், இரவு திருவீதி உலாவிலும் சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெறும். அதேபோன்று இரவில் சுவாமி திருவீதி உலாவின்போது தேவார இன்னிசை நடைபெறும்.