IPL 2019: கொல்கத்தா – டெல்லி கேப்பிட்டல் இன்று மோதல்

சற்றுமுன் விளையாட்டு

kkrvsdc - 2026

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) – டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணிகள் மோதுகின்றன.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் அதிரடி மன்னன் ரஸ்சல், கிறிஸ் லின், உத்தப்பா, சுனில் நரைன், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸல், குல்தீப் யாதவ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி 6 ஆட்டத்தில் 3 வெற்றி 3 தோல்வி பெற்று உள்ளது. அந்த அணியில் ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரி‌ஷப் பந்த், இங்க்ராம், கிறிஸ் மோரிஸ், அக்சார் பட்டேல், ரபாடா போன்ற வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் டெல்லி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பழி தீர்க்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிரமாக இருக்கும். ஆனாலும் பலம் வாய்ந்த கொல்கத்தாவுக்கு எதிராக டெல்லி முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.

புள்ளி பட்டியிலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 புள்ளிகள் பெற்று, 0.614 ரன் ரேட்களுடன் 2-வது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 புள்ளிகள் பெற்று, 0.131 ரன் ரேட்களுடன் 6-வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.