தமிழகம், புதுவையில் வாக்குப் பதிவு நிறைவு!

Published:

election commissioner satyaprada sahu - 2026

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது! மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது

மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை அடுத்து, தமிழகத்தில் வேலூர் நீங்கலாக, 37 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவு பெற்றது

இதையடுத்து சீலிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியாகவே நடைபெற்றுள்ளது என்று கூறியுள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்ய ப்ரதா சாஹு.

இருப்பினும், ஓரிரு இடங்களில் அதிமுக – திமுக, அதிமுக – அமமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே தகராறுகளும் நடைபெற்றுள்ளன!

மாலை 5 மணி நிலவரப்படி, புதுச்சேரியில் 71% வாக்குகள் பதிவாகியுள்ளன.  தமிழக மக்களவைத் தேர்தலில் இதுவரை 63.73% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73% வாக்குப்பதிவு ஆகியுள்ளதாக, சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img