திருடன் பேரெல்லாம் மோடி? ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கும் வேறு ஒரு மோடி!

இந்தியா சற்றுமுன் சென்னை

rahul gandhi 24 - 2026

ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்த பீகார் துணை முதல்வர்

பீகார் மாநில துணை முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சுஷில்குமார் மோடி வியாழக்கிழமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை கொடுத்திருக்கிறார்

ராகுல் காந்தி அண்மையில் ஒரு பேரணியில் பேசிய போது திருடர்கள் எல்லோருமே மோடி என்ற பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் சுஷில்குமார் மோடி

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மூத்த நீதித்துறை நீதிபதி நீதிமன்றத்தில் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 500 இன் படி சுசில்குமார் மோடியின் வழக்கறிஞர் இந்த வழக்கினை தொடுத்துள்ளார்

sushil kumar modi - 2026

இந்த வழக்கு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! இந்த வழக்கு ராகுலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது

முன்னதாக ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவை உள்நோக்கத்துடன் தவறான வகையில் பிரச்சாரம் செய்து வந்தார் ராகுல் காந்தி இதையடுத்து ராகுல் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாஜக எம்பி மீனாட்சி லேகி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கிரிமினல் நடவடிக்கை கோரும் மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் தங்களது உத்தரவை ராகுல் காந்தி தவறாக பிரச்சாரம் செய்ததாக கண்டனம் தெரிவித்தது

மேலும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி இது குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஏற்கனவே கூறியிருந்தது

இந்நிலையில் சுஷில்குமார் மோடியின் வழக்கம் சேர்ந்து ராகுலுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.