தமிழகத்தில் அதிகபட்சமாக சிதம்பரத்தில் 73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன அதே நேரம், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 55.77 சதவீதமாக வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
5 மணி நிலவரப்படி வாக்கு சதவீதம் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தவை…
5 மணி நிலவரப்படி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், 63.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 5 மணி வரை புதுச்சேரியில் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த பட்சமாக கன்னியாகுமரியில் 55.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாலை 5 மணி நிலவரப் படி, 18 தொகுதி இடைத்தேர்தலில், 67.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரம் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலில், 63.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன… என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யப்ரதா சாஹூ கூறியுள்ளார்.
மக்களவைத் தொகுதி இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி, நாமக்கல் – 69.60 திருப்பூர் 65, மதுரை 64.6, நாகை 67.5, பொள்ளாச்சி 64.6 நீலகிரி 61 என வாக்குகள் பதிவாகின.
நாமக்கல்லில் 29.7 3 திருப்பூரில் 65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின ஸ்ரீபெரும்புதூரில் 55.64 வாக்குகள் பதிவாகியுள்ளன கடலூரில் 62.47 சதவீத வாக்குகள் பதிவாகின




