செய்தியாளர் கேள்வியையே எதிர் கொள்ள முடியாத விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் குளிர்பான நிறுவனத்தை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளை மூடும் வரை நாங்கள் போராடுவோம்… சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் மகிழ்ச்சி அடைவேன். செய்தியாளர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியாதவர் எப்படி எதிர்க்கட்சி தலைவராக முடியும். எனவே விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது. 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்த எதிர்க்கட்சித் தலைவர் ஏன் அனைத்து கட்சியினருடன் பிரதமரை சந்திக்கவில்லை என்றார்.

