ஹாங்காங்கில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் பளு துாக்கும் பிரிவில் பங்கேற்ற தமிழக வீரா் நவீன், 3 தங்கபதக்கங்களை வென்றாா். இந்நிலையில் இன்று அவா் இந்தியா திரும்பினாா். இந்தியா திரும்பிய விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஆசிய விளையாட்டு பேட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்று தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றதில் பெருமை கொள்வதாக தெரிவித்தாா்.



