பத்திரிகை ஊடகங்களுக்கு ஏன் பேட்டி கொடுக்க மாட்டேன்றேன் தெரியுமா?! காயத்ரி ரகுராம்!

Published:

Gayathri Raguram - 2026

அரசியலிலிருந்து விலகப்போவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்ததாக ஒரு தகவல் வெளியானது! காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின!

அரசியல் களத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கருத்துக்களை தெரிவித்து வந்தார் நடிகை காயத்ரி ரகுராம். ஆனால் சில மாதங்களுக்கு முன் ஒரு பிரச்சனையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் காயத்ரி ரகுராம் பாஜகவின் இல்லை என்பதுபோல் கருத்து தெரிவித்தார்

இதனால் இருவருக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டது. தமிழிசையை குறிப்பிட்டு காயத்ரி ரகுராம் தனது அதிருப்தியை வெளியிட்டு வந்தார்.

அண்மையில் மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியினர் பேச்சை கடுமையாக சாடி வந்தார். அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தார். பிரதமர் மோடியின் செயல்பாடுகள் திட்டங்கள் ஆகியவற்றை வெகுவாக பாராட்டினார். எனவே காயத்ரி பாஜகவில் தொடர்ந்து இயங்குவது உறுதியானது.

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தான் அரசியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தார் காயத்ரி ரகுராம்.

வெறும் வாக்குவாதங்களும் மற்றவர்களை குறை சொல்வதுமாகவே இன்றைய அரசியல் களம் மிகவும் தரம் தாழ்ந்து இருக்கிறது. சிறுவர்கள் போடும் சண்டையை போல அரசியல் சண்டை மாறி இருக்கிறது. வழி நடத்த சிறந்த தலைவர்கள் இல்லை!

உருப்படியாக எதுவும் நடக்கவில்லை! மக்கள் என்ன முடிவு எடுத்து இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது! நம்மால் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா எதுவும் சரியாக நடப்பது போல் தெரியவில்லை!

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

gayathri raguram - 2026

இப்போதைக்கு எனக்கு அரசியலில் ஆர்வம் குறைந்து வருகிறது! நாம் ஏதோ நகைச்சுவை பொருள் ஆகிவிடுவோமோ என்ற வகையில் எண்ணம் தோன்றுகிறது

இது என் தனிப்பட்ட கருத்து தான்! சினிமாவை விட அரசியலில் அதிக நடிகர்கள் இருக்கிறார்கள் இப்போதும் முழுநேரமாக நடித்துக் கொண்டே இருக்கிறார்கள் !போலியான போராளிகள், போலி தலைவர்கள், தொண்டர்கள், போலி உறுப்பினர்கள், இப்படி எல்லாமே போலி! இதுதான் கடைசியில் கிடைக்கப் பெறுகிறோம் என்றால் 24 மணி நேரமும் நடித்துக் கொண்டிருக்க இயலாது!

நேரம் வரும்போது நான் அர்ப்பணிப்பு உணர்வுடனும் உண்மையுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன்! அரசியல்வாதி என்பது வில்லன் கதாபாத்திரம் போன்றதுதான்! பேராசை தந்திரபுத்தி என எல்லாமே எதிர்மறை விஷயங்கள் தான் !

நான் இப்போதைக்கு வெளியிலிருந்து கொண்டு அனைத்தையும் பார்த்து ஆராய்ந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்! இன்னும் பல விபரங்களை கற்றுக்கொள்ள சிறிது காலம் ஓர் இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்

தீவிரமாக இறங்குவதற்கான நேரம் இது அல்ல! எனவே தேவைப்படும் போது நான் அரசியலில் வேலை செய்கிறேன்! இப்போதைக்கு நான் எந்தக் கட்சியையும் ஆதரிக்கப் போவதில்லை! இது எனது தனிப்பட்ட முடிவு தான் ! எனவே அனைவருக்கும் எனது நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார் காயத்ரி ரகுராம்!

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

அவருடைய இந்தக் கருத்துக்கு பலரும் காயத்ரி அரசியலில் இருந்து விலகினார் என்றும் பாஜகவில் இருந்து விலகினார் என்றும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்!

இதனிடையே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை குறிப்பிட்ட காயத்ரி ரகுராம் நான் கட்சியில் இருக்கும் போது கட்சியில் அவர் இல்லை என்பது போல் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு முறை குறிப்பிட்டார்! ஆனால் இப்போதும் நான் பாஜகவை விட்டு விலகுகிறேன் என்று எங்குமே குறிப்பிடவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்

மேலும் பத்திரிகைகளின் போக்கையும் ஊடகங்களின் அரசியலையும் சாடியிருக்கிறார்! தன்னுடைய ஒரு சில டிவீட்டுகளில் ஊடகங்களை கடுமையாக குறை சொல்லியும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!

பத்திரிகைகள் மிகவும் தரம் தாழ்ந்து இருக்கின்றன; செய்தி சேனல்கள் அதைவிட மிக மட்டமாக இருக்கின்றன! நான் எப்போது பிஜேபியை விட்டு விலகுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்! ஆனால் நான் சொல்லாததை சொல்லியிருக்கிறார்கள்!

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

நான் ஒரு சிறிய இடைவேளை இடைவெளி எடுத்துக் கொள்வதற்கும் முழுவதுமாக விலகி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது! எனவே பொய்யான தகவல்களை நான் கூறியது போல் போட்டிருப்பதை தயவு செய்து நீக்கி விடுங்கள்! எனவேதான் நான் எந்த பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் ரேடியோ அல்லது கருத்துக்களை தெரிவிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்!

Related articles

Recent articles

spot_img