இந்து தீவிரவாதம் குறித்த கமல் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன் ராஜை ஆதரித்து பள்ளப்பட்டியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்த்தார். அப்போது, இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இனது, அவர் பெயர் கோட்சே என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையில் இருந்தே தொடங்குகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த பேச்சு தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து கமல்ஹாசன் தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை, நடிகர் விவேக் ஒபராய் போன்றவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கமல் தேர்தல் விதிகளை மீறி பேசியதாக பாஜக வழக்குரைஞர் அஸ்வின் குமார் உபாத்யாயா தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அந்த புகாரில் கமல், பிரச்சரம் குறைந்தது 5 நாட்களுக்காவது தடை விதிக்க வேண்டும் என்றும் கமல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்



