அம்மா ஆகிறார் சினேகா; பிரசன்னா மகிழ்ச்சி

sneha-prasanna1 காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னா – நடிகை சினேகா தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இந்தத் தகவலை இன்று பிரசன்னா மகிழ்ச்சியுடன் அறிவித்தார். பிரசன்னா – சினேகா இருவரும் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2012 மே 11 அன்று திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று, விரைவில் சினேகா அம்மா ஆகப் போவதை பிரசன்னா மகிழ்ச்சியுடன் அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், இந்தச் சிறந்த நாளில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தியைப் பகிர விரும்புகிறேன். எங்கள் குடும்பத்தில் விரைவில் ஒரு புதிய உறுப்பினரை எதிர்பார்க்கிறோம். என்று தெரிவித்திருந்தார். இதை அடுத்து சினேகா, பிரசன்னா இருவருக்கும் ரசிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.