இடைஞ்சல் தந்த மதுபானக் கடை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மூட ஆட்சியர் நடவடிக்கை

கரூர்: கரூர் அருகே  பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி பொதுமக்கள் முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தினர். கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கடையை தாற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பித்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்னதாராபுத்தை அடுத்த எல்லை மேட்டில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான காடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை சுற்றி சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுவான பேருந்து நிறுத்தம் , கோவில்கள் , பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இங்கே மது அருந்தும் இளைஞர்கள் சாலையில் செல்வோரை தகாத வார்த்தையில் திட்டுவதும் கோவிலுக்கு செல்லும் பாதையில் மது பாட்டில்களை உடைப்பதும் மற்றும் குடிநீர் குழாயில் அருகிலேயே மது அருந்துவதும் வழக்கமாக கொண்டுவருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பாலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் காலை சுமார் 100க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் மாதுபான கடையின் முன்பு ஒன்று கூடி கடையை திறக்க விட்டாமல் முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி தாற்காலிகமாக அரசு மதுபான கடையை மூட உத்தரவிட்டார். இதனையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப் பட்டது. இதனால் இப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இனிமேல் டாஸ்மாக் கடை இதே பகுதியில் திறக்கப்பட்டால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 14-04-15 Karur TASMAC Shop Mutrugai News photo 01 14-04-15 Karur TASMAC Shop Mutrugai News photo 03