கோவில்பட்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுவிலக்கை பற்றி பேசியபோது குடிநீர் பிரச்னை குறித்து பெண்கள் கேள்வி கேட்டதால் ஆவேசமடைந்தார்.
தூத்துக்குடி மாவ
ட்டம் கோவில்பட்டியில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மதுவிலக்கு குறித்து பேசிய வைகோ, சென்னை போ
ன்ற பெரு நகரங்களில் பெண்களே குடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர், வைகோவிடம் குடிநீர் சரியாக வருவதில்லை என முறையிட்டார். இதனால் ஆத்திரமடைந்த வைகோ நான் மதுவின் கொடுமை பற்றி பேசும்போது, நீங்கள் குடிநீர் பிரச்னை பற்றி பேசி பேச்சை மாற்றுகிறீர்கள் என்று தெரிவித்தார்.



