தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று மு.க அழகிரி அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதால் மீண்டும் திமுக- வில் இருந்து அழகிரி நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக திமுக அறிவிப்பை விரைவில் வெளியிட கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மு.க ஸ்டாலினுக்கும் மு.க அழகிரிக்கும் இடையே ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக மு.க ஸ்டாலின் கொடுத்த குடைச்சலால் திமுக- வில் இருந்து ஏற்கனவே மு.க அழகிரி திமுக- வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
அதனால் கோபம் அடைந்த மு.கஅழகிரி கடந்த சில வருடங்களுக்கு முன் நாடாளுமன்ற தேர்தலின் போது கூட திமுக- விற்கு எதிராக பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டார். இந்த நிலையில் மு.கஅழகிரி – மு.க ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள விரோத போக்கு முடிவுக்கு வராதநிலையில் சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும் மு.க அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்ததாக திமுக அறிவித்தது.
அதற்கு அழகிரியின் துாதுவராக அவரது சகோதரி செல்வி நின்று எடுத்த முழு முயற்சியே. இருந்த போதிலும் மீண்டும் மு.க அழகிரியை கட்சிக்குள் இணைக்கும் பேச்சு வார்த்தை நீண்டுக்கொண்டே வந்தபோது மு.க அழகிரியும் வெகு நாட்களுக்கு பிறகு கடந்த மாதத்தில் மு.கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
அழகிரி – கருணாநிதிசந்திப்பு குறித்து மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அப்பாவும் மகனும் சந்தித்து கொண்டார்கள் இதில் அரசியல் எதுவும் இல்லை’ என்று செய்தியாளர்களிடம் கருத்துச்சொன்னார்.
மு.க அழகிரி அந்த சந்திப்பின்போது திமுக- வில்மீண்டும் இணைந்து செயல்பட பல நிபந்தனைகளை கருணாநிதியிடம் அழகிரி முன்வைத்ததாக கூறப்படுகிறது .
அதன் பின்னர் மு.க அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்வார் என்று செய்திகள் வலம் வந்த நிலையில் திமுக தனது சட்டமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. ஆனால் அந்த பட்டியலில் மு.க அழகிரி யின் ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்பு அளிக்கப்படும் என மு.க அழகிரி உட்டபட அனைவரிடமும் இருந்தது.
ஆனாலும் அதில் மு.க ஸ்டாலின் ஆட்களுக்கே பெருமளவு தேர்தலில் போட்டியிட வாய்பு அளிக்கப்பட்டது. அதனால் வெறுப்பு அ டைந்த
மு.க அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன் ‘மதுரையில் திமுக தோற்கும்’ என்று கொந்தளித்து கொதிப்பை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின்போது மு.க அழகிரி ஊடகங்கள் வாயிலாக வாயை வாய் திறந்து திமுக- விற்கு எதிராக செயல் பட்டு விடுவார் என்றே அனைவரிடமும் கருத்து இருந்தது. அதன் காரணமாக தான் மு.க அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார் என பரவலாக சொல்லப் பட்டது .
இந்த நிலையில் மதுரையில் இன்று காலை தனது ஆதரவாளர்களை சந்தித்த மு.க.அழகிரி,’ நீங்கள் எல்லோரும் மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஒரு பெண் எப்பவும் தி.மு.க.வுக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுவீங்க’ என்று கேட்டார். அதற்கு மு.க.அழகிரி நான் சொல்றத செய்யுங்கம்மாஎன்று அழுத்தமாக கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
அழகிரியின் ஆதரவாளர்கள் கலைந்து போகாமல் அப்படியே நின்றிருந்தநிலையில் வீட்டிற்குள் போன அழகிரி மீண்டும் வெளியே வந்து அவரின் ஆதரவாளர்களிடம் வரும் 19 ம் தேதிக்குப் பிறகு இந்தக்கூட்டம் கூட இங்கு வரமாட்டீங்க” என்று கண் கலங்கி தெரிவித்தார். அதைக் கேட்ட அழகிரியின் ஆதரவாளர்கள்,” நாங்க எங்கேயும் போக மாட்டோம். எப்பொழுதும் உங்களுடன்தான் இருப்போம் என்றனர்.
அதற்கு அழகிரி “பார்க்கலாம். பார்க்கலாம். அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டுப்போடுங்கள்” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட மு.க அழகிரி அவரின் ஆதரவாளர்களிடம் தெரிவித்தமைக்காக மு.க. அழகிரி திமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப் பட்டுள்ளதாக மீண்டும் திமுக.அறிவிப்பை விரைவில் வெளியிட கூடும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.



