கல்வெட்டில் பெயர்: ஒருவர் கைது

Published:

images 42139788092. - 2026

ஓ.பி.எஸ் மகன் பெயருடன் எம்.பி என குறிப்பிட்டு கல்வெட்டு பொறித்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டம் குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே எம்.பி என குறிப்பிட்டு கல்வெட்டு பொறித்ததால் பெரும் சர்ச்சை உருவானது. இதை அடுத்து, கல்வெட்டில் இருந்த ரவிந்தரன் பெயர் மறைக்கப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளித்த ஒ.பி.எஸ் மகன் ரவிந்தரன், தன் பேரை கொடுக்கும் நோக்கில் இது போன்று பெயர் பொறுத்தப் பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இது போன்று செய்தவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, அதிமுக வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகனை சின்னமனூர் போலீசார் கைது செய்தனர்.

Related articles

Recent articles

spot_img