புதிய மின் திட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் பேரவையில் ஆற்றிய உரையின் முழு வடிவம்

panneerselvam சென்னை: ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது தமிழகத்தில் புதிய மின் திட்டங்களை செயல்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள்  குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆற்றிய உரையின் முழு வடிவம்: மாண்புமிகு பேரவை துணைத் தலைவர் அவர்களே, 2011 ஆம் ஆண்டு மே மாதம்  மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர் 4,640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு தற்போது கிடைத்து வருகிறது என்பதை நான் இங்கு பதிவு செய்யகடமைப்பட்டிருக்கிறேன். இது தவிர வல்லூர் மூன்றாம் அலகிலிருந்து நமது பங்காக 350 மெகாவாட் மின்சாரம் இன்னும்சில நாட்களில் கிடைக்கப் பெறும்.  மேலும், 2,163 மெகாவாட் மின்சாரம் இன்னும் சில மாதங்களில் கிடைக்கும்.இது தவிர 1,980 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் துவக்கப்படவுள்ளன. அதன் விவரம்பின்வருமாறு:- 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதிமத்திய அரசால் 24.01.2013 அன்று வழங்கப்பட்டது என்றாலும், அதற்கு முன்னரே பொறியியல்கொள்முதல் கட்டுமான பணிக்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு 15.03.2013 அன்றுஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.  பாரத மிகு மின் நிறுவனம் மற்றும் லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் ஆகியநிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பித்தன. இதனைத் தொடர்ந்து 12.08.2013 அன்று விலைப்புள்ளிகள்திறக்கப்பட்டு 27.02.2014 அன்று இந்தத் திட்டத்திற்கான பணி ஆணை லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.   இதற்கிடையில் திட்ட நிலத்தை சமன்படுத்தும் பணி ரூபாய் 7 கோடிமதிப்பீட்டில் 08.07.2013 அன்றே மின் வாரியத்தால் துவக்கப்பட்டு, அந்தப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.தற்போது கட்டுமானப் பணிகள்  லேண்கோ இன்ப்ரா டெக் லிமிடெட் நிறுவனம் தொடங்கி நடந்து வருகின்றது. 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணுhர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின்திட்டத்திற்கான மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி 07.01.2014 அன்று தான் வழங்கப்பட்டதுஎன்றாலும், அதற்கு பல மாதங்களுக்கு முன்னரே மேற்கண்ட திட்டத்திற்கான தொழில்நுட்ப வணிக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அந்த ஒப்பந்தப் புள்ளிகள் 26.07.2013 அன்றே திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து,இதற்கான விலை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அவை 5.2.2014 அன்று திறக்கப்பட்டன. இடையில் தேர்தல்நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததன் காரணமாக மேல் நடவடிக்கை எடுக்க முடியாத சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, இதற்கான பணி ஆணை 27.9.2014 அன்று பாரத மிகுமின்நிறுவனத்திற்கு (க்ஷழநுடு) வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்னரே, ஒப்பந்தப் புள்ளிகள்கோருவதற்கான விவரங்கள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படுவதே சரியான முறையாக இருந்தாலும்,மக்கள் நலத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்குமுன்னரே ஒப்பந்தப் புள்ளிகள் கோர புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டதால் தான், விரைவாக பணிஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு தற்போது பாரத மிகுமின் நிறுவனம் (க்ஷழநுடு) கட்டுமானப் பணிகள் தொடங்கிநடந்து வருகின்றது. இது தவிர எண்ணூர் மாற்று  அனல் மின் திட்டம் மற்றும் உப்பூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின்மூலம் 2,260 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன் விவரம் பின்வருமாறு:-660 மெகாவாட் எண்ணுhர் மாற்று அனல் மின் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கைதயாரிக்கப்பட்டு சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு செய்வதற்காக குறிப்பு விதிமுறைகளை இறுதி செய்ய தமிழ்நாடுமின் பகிர்மான கழகம் 09.01.2014 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம்விண்ணப்பம் செய்துள்ளது.  மத்திய சுற்றுச்சூழல்  மற்றும் வனத்துறை அமைச்சகத்தால் குறிப்பு விதிமுறைகள்(கூநசஅள டிக சுநகநசநnஉந) இறுதி செய்யப்பட்டுள்ளது.  விரைவில் சுற்றுச்சூழல் ஆய்வு பணிகள்தொடங்கப்படவுள்ளன. 1,600 மெகாவாட் மின் திறன் கொண்ட உப்பூர் மின் திட்டத்திற்கான குறிப்பு விதிமுறைகளை மத்தியஅரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 28.05.2012 அன்று பரிந்துரை செய்தது.  இதனைத்தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதி 22.11.2012 அன்று பெறப்பட்டது. இந்தத்திட்டத்திற்கான நிலம் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, பகவதி அனா லாப்ஸ், ஐதராபாத் என்றநிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்டு அக்டோபர் 2013-ல் இறுதி செய்யப்பட்டது.  விரிவான கடல் சார்ந்த சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, வாப்காஸ் என்ற மத்திய அரசின் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு டிசம்பர் 2013-ல் இறுதி செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்திற்கான திட்ட விளக்க அறிக்கை ஜனவரி 2014 அன்று இறுதிசெய்யப்பட்டது. தமிழக அரசு இத்திட்டத்திற்காக பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தநிர்வாக அனுமதியை 21.01.2014 அன்று அளித்தது. இத்திட்டத்திற்கான நிலங்களை ஆர்ஜிதப்படுத்த சிறப்புதாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மக்கள்  கருத்துக் கேட்பு கூட்டம் 04.07.2014 அன்று தமிழ்நாடுமாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடத்தப்பட்டது.  இத்திட்டத்தில் இருந்து வெளியாக உள்ள குளிர்விக்கும் நீர்,அருகில் உள்ள கடற்புல்வெளி மற்றும் கடற்பசு வாழ்விடத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்த ஆய்வினைமேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேசியக் கடலோர மேலாண்மைக் குழுவுக்கு மாநிலக் குழுபரிந்துரைத்துள்ளது. மேற்கண்ட ஆய்வினை நடத்துவதற்காக, ஒப்பந்தப்புள்ளிக்கான வாரியக் குழு 19.01.2015அன்று நடைபெற்ற கூட்டத்தில், ஆய்வுக்கான கலந்தாய்வுப் பணியினை வேப்காஸ் நிறுவனத்துக்கு அளிக்கலாம் என்றுவாரியத்துக்குப் பரிந்துரை செய்தது.  கலந்தாய்வாளரின் அறிக்கை பெறப்பட்டவுடன், திட்ட சுற்றுச்சூழல்அனுமதிக்காகவும், கடலோர மேலாண்மை அனுமதிக்காகவும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைஅமைச்சகம் அணுகப்படும். இத்திட்டத்திற்கான நிலக்கரியை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொண்டு வருவதற்காக28 கி.மீ.  நீள தனியார் இருப்புப் பாதையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அமைக்கவேண்டும். இருப்புப்பாதை வழித்தடத்தினை அமைப்பதற்காக “”””ரைட்ஸ்”” நிறுவனம் தயாரித்த சாத்தியக்கூறு அறிக்கைஇறுதி செய்யப்பட்டு வருகின்றது. இறுதி செய்யப்பட்டதும் அனுமதிக்காக தென்னக ரயில்வே அணுகப்படும்.அனுமதி கிடைத்தவுடன் விரிவான இருப்புப்பாதை வழித்தட ஆய்வினை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்.இத்திட்டமானது 2019-20-ல் இயக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வடசென்னை அனல் மின் திட்டம் மூன்றாம் நிலை (800 மெகாவாட்)உடன்குடி அனல் மின் திட்டம் விரிவாக்கம் (2 ஒ 660 மெகாவாட்), தூத்துக்குடி அனல் மின் திட்டத்திற்கான மாற்றுத் திட்டம் என மொத்தம் 3,440 மெகாவாட் மின்சார திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி பெறநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவன்றி மத்திய அரசால் நிறைவேற்றப்படவுள்ள 4,000 மெகாவாட் செய்யூர் அனல் மின் நிலையத்தில்நமது பங்காக 1,200 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கப் பெறும்.  இதற்கான நில எடுப்புப் பணிகள் அரசால்முடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், 2000 மெகாவாட் திறனுள்ள சில்லஹல்லா நீறேற்றும் மின் திட்டத்திற்கானஆய்வுப்பணி  மற்றும் 500 மெகாவாட் திறனுள்ள குந்தா நீறேற்றும் மின் திட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.  மேலும், 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நீண்ட கால ஒப்பந்தங்களின்அடிப்படையில் வாங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது.  மேற்கண்ட 3330 மெகவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தமிழ்நாடு மின்வாரியம் மேற்கொண்டால் சுமார் ரூபாய் 22000  கோடி  முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதுதவிர,சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிடவே இரண்டு ஆண்டுகள் ஆகும். மேலும், இத்திட்டங்களை நிறைவேற்ற ஐந்துஆண்டு காலம் ஆகும்.  மேற்கண்ட கால விரயத்தை தவிர்க்கும் பொருட்டும், உடனடியாக மின்சாரம்கிடைப்பதற்காகவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் நிலக்கரி வளம் இல்லை என்பதாலும்,ஏற்கெனவே இயங்கும் அனல் மின் நிலையங்களுக்கே நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாலும், புதிய அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு கிடைக்காததால் வெளிநாட்டு நிலக்கரியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைஏற்பட்டுள்ளதாலும், வட மாநிலங்களில் ஏற்கெனவே நிலக்கரி ஒதுக்கீடு பெற்று நிலக்கரி சுரங்கங்களுக்குஅருகில் அமைந்துள்ள தனியார் அனல் மின் நிலையங்களிடமிருந்து நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள்மேற்கொள்வது தான் தமிழகத்தின் நீண்ட காலத் தேவையை நிறைவேற்றும் வழியாகும். ஆக மொத்தத்தில், 16,033  மெகாவாட் அனல் மின் உற்பத்திக்கும்  2,607 மெகாவாட் புனல் மின்உற்பத்திக்கும்  நீண்ட கால கொள்முதல் மூலம் 3,300 மெகாவாட் மற்றும் நடுத்தர கால கொள்முதல் மூலம்500 மெகாவாட்  என மொத்தம் 22,440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால்  வழிவகைசெய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தை பொறுத்தவரையில் ஒப்பந்தப்புள்ளி வாயிலாக 708 மெகாவாட் திறனுள்ளசூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கட்டாய சூரியசக்தி கொள்முதல்தொடர்பாக நிலுவையில் உள்ள உச்சநீதிமன்ற / உயர்நீதி மன்ற மனுக்களாலும், மின் கொள்முதல் விலைக்கும், மின்கொள்முதல் ஒப்பந்தத்திற்கும் தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி மறுத்துவிட்ட காரணத்தாலும்மேற்கொண்டு தொடர முடியவில்லை. மேலும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 12.09.2014அன்று மாநிலத்தின் புதிய சூரிய மின்சக்தி கொள்முதல் விலைக்கான ஆணையை வழங்கியுள்ளது.  இந்த ஆணையின் படி,2064 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க 70 சூரிய மின் உற்பத்தியாளர்கள்இதுவரை பதிவு செய்துள்ளார்கள்.  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சூரிய கொள்முதல்ஒப்பந்தத்திற்கு 22.1.2015 அன்று அனுமதி அளித்துள்ளது.  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகம் இதுவரை பதிவு செய்த சூரிய மின் உற்பத்தியாளர்களுடன் சூரிய கொள்முதல் ஒப்பந்தம் விரைவில்ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல், சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் மூலம் 1 கிலோ வாட் சூரியமேற்கூரை மின் நிலையம் அமைக்கும் வீட்டு உபயோக நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு அரசால் 20,000ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தின் மூலம், இதுவரை 1,346 பேர் பயன்அடைந்துள்ளனர். இதே போன்று, சூரிய ஒளி மின்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டு மேற்கூரையில் சூரிய மின் தகடுகளை அமைத்து, குடியிருப்போரின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 82,275 பசுமை வீடுகள் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு உள்ளன. இது தவிர, சூரியசக்தி மூலம் தெருவிளக்குகளை மின்னூட்டுதல் திட்டத்தின் கீழ், இதுவரை 19,540 தெருவிளக்குஅமைப்புகள் எரிசக்தி திறனுள்ள 20 வாட் டுநுனு விளக்குகளாக மாற்றப்பட்டு உள்ளன. அதாவது, சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், 2011 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மாஅவர்களின் தலைமையிலான அஇஅதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை முடிக்கப்பட்ட திட்டங்கள்,நடுத்தரகால மற்றும் நீண்டகால கொள்முதல் ஆகியவற்றின் வாயிலாக  4,640 மெகாவாட் மின்சாரம்பெறப்படுகிறது.  எனவேதான், மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டு மின் தேவையை தன்னிறைவை எய்தும் நிலையைஎட்டிக் கொண்டு இருக்கிறோம். திரு. கணேஷ்குமார் பேசும் போது சூர்ய மின்சக்தி எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது எனவினவினார். 2011-ஆம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்ற பின் 112 மெகாவாட் சூர்ய ஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் தனியார் மூலம் நிறுவப்பட்டு அந்த மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது.

  • இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories