நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

hbd karthi2 - 2026நடிகர் கார்த்திக் சிவகுமார் 1977 மே 25ல் பிறந்தவர். தற்போது 42 வயதாகும் கார்த்தி தனது அசால்ட்டான குறுகுறு குறும்புத்தன நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

2007;ல் நடிப்புத்துறைக்கு வந்தவர். அதற்கு முன் இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவியாளராகவும் இருந்துள்ளார். நடிகர் சிவகுமாரின் இரண்டாவது கலை வாரிசு! குடும்பத்தில் அண்ணன் சூர்யா, அண்ணி ஜோதிகா என நடிப்புத் துறையில் கோலோச்சியவர்கள். மனைவி ரஞ்சனி.

பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என சில படங்கள் இவரை திரை உலகுக்கு அடையாளம் காட்டி பெயர் சொல்ல வைத்தவை.hbd karthi - 2026

கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். முதல் திரைப்படம் பருத்தி வீரனே இவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்தது! இன்றளவும் மிகச் சிறந்த படமாக பருத்திவீரன் திகழ்கிறது

ஒரு சுவாரஸ்யம், இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர். முதுகலை வணிக மேலாண்மை பயின்றவர். திறமைசாலியான நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்த நாள். இதை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் டிவிட்டர் பதிவுகளில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதற்காக வீடியோக்களும் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.