ஜல்லிக்கட்டுப் போட்டியை மீண்டும் தடை செய்ய உச்சநீதிம்ன்றத்தை நாடுவோம் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பீட்டா அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது எட்டு பேர் இறந்துள்ளனர். மேலும் ஏராளமான வீரர்கள் காயடைந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி இந்தாண்டு ஜனவரி 15ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளில் ஆய்வு மேற்கொண்டதாகவும், அதில், காளைகளை சுமார் 16 மணி நேரம் வரை வரிசையில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதாக தெரிய வந்துள்ளது. எனவே ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்த உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் கொடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளது.



