வைகாசி அமாவாசை! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்! அன்னதானம் போதவில்லை!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்

sathuragiri - 2026வைகாசி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்! இருப்பினும் அன்னதானம் சரிவர ஏற்பாடு செய்யப் படாததால், பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

விருதுநகர் அருகே சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சந்தன மகாலிங்கம் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்!

அமாவாசையை முன்னிட்டு ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்வதற்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த இரு நாட்களில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்!

அமாவாசையான நேற்று தமிழகம் புதுச்சேரி கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர்! தாணிப்பாறை பகுதியில் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது! பிறகு காலை 6 மணி முதல் வனத்துறையினரின் சோதனைகளுக்குப் பின்னர் பக்தர்கள் மலை மேல் ஏற அனுமதிக்கப்பட்டனர்!

sathuragiri mahalingam - 2026அதிகாலை சுந்தரமகாலிங்கம் சந்தனமகாலிங்கம் சுந்தரமூர்த்தி சுவாமி கோவில்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன! ராஜ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்!

தனியார் அன்னதான மடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் சிவராமன் சூரியன் கூறியிருந்தார். இருப்பினும் போதுமான உணவும் தண்ணீரும் கிடைக்கவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர்!

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இன்று பகல் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.