தோனி கிளவுஸ் பிரச்னை: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி! ரசிகர்கள் கொதிப்பு!

dhony glove1 - 2026

ராணுவத்தினருக்கு வழங்கப்படும் ‘பலிதான்’ பேட்ஜ் பதித்த கீப்பிங் கிளவுஸ் அணிந்து தோனி விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் சுற்று ஆட்டம் கடந்த 5-ஆம் தேதி சௌதாம்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி இந்திய ராணுவத்தின் பலிதான் பேட்ஜ் முத்திரை பதித்த கீப்பிங் கிளவுஸ் அணிந்து விளையாடினார். இது இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தோனியின் நாட்டுப் பற்றுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்தனர். ஆனால் இந்த முத்திரையை நீக்க வேண்டும் என பிசிசிஐயிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தி கடிதம் எழுதியது. மேலும், ஒரு கிளவுசில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு முத்திரைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

balidan2 - 2026இது குறித்து பிசிசிஐ., ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் தோனி அணிந்துள்ள கிளவுசில் இடம்பெற்றுள்ள முத்திரை மத ரீதியானது இல்லை எனக் குறிப்பிட்டு அதற்கான அனுமதியை வழங்குமாறு கூறியது. ஆனால், பிசிசிஐ விடுத்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

இதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோனி வேறு கிளவுஸ் அணிந்து விளையாடக் கூடும். இது இந்திய ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories