நான் இந்துதான்! பிறந்தது இந்துவாக..! சாகும்போதும் இந்துவாகத்தான்..! அலறும் சுப்பா ரெட்டி!

Published:

subba reddy jagan mohan - 2026

ஒய் வீ சுப்பா ரெட்டி ஹிந்து அல்ல என்று பிரச்சாரம் செய்யப்படுவதற்கு ஜெகன் ஆதரவாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

ஒய் வீ சுப்பாரெட்டி கிறித்துவர். அவரை எப்படி திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக நியமிக்கலாம் என்று விவாதம் சூடுபிடித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப் பட்ட போட்டோ ஸ்கிரின்ஷாட்கள் இப்போது வைரலாகி வருகின்றன. சுப்பா ரெட்டி ஹிந்து பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் கிறிஸ்துவர் என்று பிரசாரம் களை கட்டி வருகிறது.

இந்நிலையில், சுப்பாரெட்டி இதனைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறார்.  திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மனாக ஒய்வீ சுப்பாரெட்டி நியமனம் விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அவர் இது குறித்து என்ன சொல்கிறார்?!

திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மனாக முன்னாள் எம்பி ஒய்எஸ்ஆர் ஜெகன் கட்சியின் சீனியர் தலைவர் ஒய்வீ சுப்பா ரெட்டிக்கு வாய்ப்பளித்துள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆனால் இவர் பெயரை வெளியிட்டபின் புது விவாதம் தலையெடுத்துள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

சுப்பா ரெட்டி கிறிஸ்துவர் என்று  சமூக வலைத்தளங்களில் ஆந்திரம் தமிழகம் கர்நாடகத்தைச் சேர்ந்த பலரும் பரபரப்பான பிரசாரம் செய்து, விவாதத்தையும் சூடாகக் கிளப்பி வருகின்றனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மனாக அறிவிக்கப்பட்ட உடனேயே அவர் விக்கிபீடியாவில் தன் மதத்தை கிறிஸ்டியனில் இருந்து ஹிந்துவாக மாற்றி விட்டார் என்ற பதிவுகள் வைரல் ஆகி வருகின்றன.

subba reddy - 2026தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி இருந்தபோது தி.தி.தேவஸ்தான சேர்மனாக புட்டா சுதாகர் யாதவ் நியமிக்கப்பட்ட போது அவரை கிறிஸ்துவர் என்று ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் கட்சிதான் பிரசாரம் செய்தது. இந்நிலையில், இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ஜெகன் ஆதரவாளர்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ளார் ஒய்வீ சுப்பாரெட்டி!  ஒரு டிவி சேனலில் பேசிய சுப்பா ரெட்டி, “வெங்கடேஸ்வர சுவாமிக்கும் மக்களுக்கும் சேவை செய்வதற்கு ஜெகன் எனக்கு பொறுப்பும் வாய்ப்பும் வழங்கி, ஒப்படைத்துள்ளார். நான் பிறந்தது முதல் இப்போது வரை இந்துவாகவே உள்ளேன். ஒவ்வொரு வருடமும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்குச் சென்று வருவேன். நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை சீரடி செல்வது என் வழக்கம்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

என்னை ஹிந்து அல்ல என்று சொல்பவர்கள் ஹைதராபாதிலும் ஓங்கோலிலும் உள்ள என் வீடுகளுக்குச் சென்று பார்க்கலாம். நானும் என் குடும்பத்தினரும் எவ்வாறு பூஜை செய்கிறோம் என்று எங்கள் வீட்டுக்கு வந்து பாருங்கள்” என்று காட்டத்துடன் பதிலளித்துள்ளார் சுப்பாரெட்டி.

“தெய்வமே சாட்சியாக வாழும் என்னை கிறிஸ்துவன் என்று சொன்னால் அதற்கு பதிலளிப்பது கூட கஷ்டமாக உள்ளது. என் கழுத்தில் எப்போதும் வெங்கடேஸ்வர சுவாமி டாலர் இருக்கிறது. வேண்டுமென்றே என் மேல் சிலர் சேறு பூசப் பார்க்கிறார்கள்” என்று ஆவேசப்பட்டார்.

“திருப்பதி பாலாஜி என் இஷ்ட தெய்வம். திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மன் பதவிக்கு என்னை முன்மொழிந்தது என் அதிர்ஷ்டம். நான் பிறந்தது இந்துவாக! சாவதும் இந்துவாகவே!” என்று உணர்ச்சி வசப்பட்டார் சுப்பாரெட்டி.

இது இவ்வாறு இருக்க சுப்பாரெட்டி மீது நடக்கும் பிரசாரம் குறித்து ஜகனின் கட்சி ஆத்திரத்தில் உள்ளது. வேண்டும் என்று அவரை டார்கெட் செய்கிறார்கள் என்றும் விக்கிபீடியா பக்கத்தை எடிட் செய்து தவறாக பிரசாரம் செய்து வருகிறார்கள் என்றும் இதெல்லாம் சதித்திட்டம் என்றும் கட்சியினர் ஆவேசக் குரல் எழுப்பி வருகின்றனர்!

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img