நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம் வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லிங்கா படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்ஜித் இயக்குகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
முரளி ஒளிப்பதிவில் பிரவீன் கே.எல். படத்தொகுப்பு செய்துள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய கபாலியின் படப்பிடிப்பு கோவா, மலேசியா, சிங்கப்பூர் என அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிவடைந்தது. இதையடுத்து ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் டப்பிங் பேசி வந்தனர்.
கபாலி படத்தின் “டீசர்’ அண்மையில் வெளியாகி, உலகம் முழுவதும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஜூலை 1-ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகவுள்ளது. மலாய் மொழியில் மொழி மாற்றம் செய்யப்படும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை கபாலி பெறுகிறது
மலாய் மொழியில் கபாலி
Popular Categories



