எச்டிசி 10 ஸ்மார்ட்போன் வருகிற மே 26 வியாழக்கிழமை முதல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிறது.
இந்த போன் இந்தியாவில் ரூ.50,000 க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் எல்ஜி ஜி5, சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் உள்ளிட்ட மொபைல் போன்கள் இந்தியாவில் அறிமுகமாக தயாராக உள்ளன. இந்நிலையில், ‘குளோபல் ஃப்ளாக்ஷிப்’ கருவியான எச்டிசி 10 கருவியை விரைவில் இந்தியாவில் வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. எச்டிசி 10 கருவியில் 5.2 இன்ச் திரை, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக மெமரியை 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Dhinasari News Summary: HTC 10 India Launch Expected at Thursday Event




