தமிழக சட்டசபை முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்ட சபை கூட்ட அரங்கில், இன்று காலை, 11:00 மணிக்கு கூடுகிறது. கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் செம்மலை, புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். முதலில், முதல்வர் ஜெயலலிதா, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பர். இன்றைய கூட்டம், பதவியேற்பு நிகழ்ச்சியுடன் நிறைவுபெறும். ஜூன், 3 காலை, 10:00 மணிக்கு, சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது



